பாரதிராஜாவின் அப்பன் ஆத்தா!
இயக்குனர் இமயம் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான டைரக்டர் பாரதிராஜா, பொம்மலாட்டம் படத்திற்கு பிறகு தனது அடுத்த பட இயக்கத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இப்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். தனது நீண்ட நாளைய பொக்கிஷமான அப்பன் ஆத்தா கதையை படமாக்க முடிவு செய்த அவர் தற்போது தேனியில் முகாமிட்டிருக்கிறார்.
வழக்கமான பாரதிராஜா ஸ்டைல் மண் வாசம் மாறாமல் உருவாகி வரும் அப்பன் ஆத்தா படம் ஒரு புரட்சி படமாக இருக்கும் என்று அவரே கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இத்தனை வருஷத்தில் மிகப்பெரிய புரட்சிப்படங்கள் எதுவும் நான் பண்ணியதில்லை. அப்பன் ஆத்தா அந்த குறையை போக்கும். ஓர் அப்பாவி அப்பன் ஆத்தா. எல்லா கஷ்டங்களையும் அனுபவிச்ச பின்னாடி நாங்க நொந்து நொம்பலப்பட்டது போதும். எங்க பிள்ளைகளாச்சும் வாழ்க்கையில் நல்லா வரணும்னு நினைக்கிறாங்க. தன் பிள்ளைகளை பெரிய விஞ்ஞானியா, ஜர்னலிஸ்ட்டா, பிரொபஸரா, டாக்டரா ஆக்க நினைக்கிறாங்க. ஆனால் ஒரு கட்டத்துல அந்த பிள்ளைகள் தவறா போயிடுறாங்க. பெத்த பிள்ளைகளே இப்படி ஆகிப்போச்சுன்னா ஒரு தாயும் தகப்பனும் என்ன செய்வாங்களோ, அதை செய்யுறாங்க என் அப்பன் ஆத்தா. இதுதான் கதை, என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment